இரவில் திடீரென அலறிய மகள்… ஓடிச்சென்று பார்த்த தந்தை கண்ட காட்சி..!

அமெரிக்காவில் வீட்டில் திருட வந்த மர்ம நபர் 11 வயது சிறுமியை மிரட்டிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தைச் சேர்ந்தவர் டெரிக். இவரது மகள் ஏவா(11).

இந்நிலையில், இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அலறியுள்ளார்.

இதனால், அதிர்ந்து போன டெரிக் உடனடியாக, ஏவாவின் அறைக்கு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர், ஏவாவை கீழே தள்ளிவிட்டு ஓடியுள்ளார்.

உடனடியாக டெரிக் அந்த மர்ம நபரை துரத்தியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் தப்பி சென்றுள்ளார். உடனடியாக டெரிக் அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதன் மூலம், ஸ்டீஃபன் 21 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, குறித்த வீட்டில் திருட சென்றதாகவும், அப்போது ஏவா தன்னை பார்த்து விட்டதாகவும், அதனால் அவரை அறைக்குள் தள்ளிவிட்டு ஓடியதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/watch/?v=1038216646519878