நகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையன்… தனியாக போராடி விரட்டிய ஹீரோ!!..

பிரித்தானியாவில் ஆயுதங்களுடன் நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளையனை, உரிமையாளர் தனியாளாக திறமையாக போராடி விரட்டியடித்துள்ளார்.

வார்விஷைர் உள்ள நகைக்கடையிலே இக்கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. கொள்ளையனை திறமையாக விரட்டியடித்த கடையின் உரிமையாளர் 59 வயதான பில் சில்வெஸ்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சம்பவத்தன்று, பைக்கில் முகமூடி அணிந்த படி இரண்டு மர்ம நபர்கள் நகைக்கடை வாசலுக்கு முன் வந்து நிற்கின்றனர்.

அதில், பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையன் இறங்கி கடைக்குள் ஓடுகிறான். இதை பார்த்த கடைக்குள் இருந்த பெண் பயந்து ஓட, உரிமையாளர் சில்வெஸ்டர் கொள்ளை கடைக்குள் நுழைவதை தடுக்க போராடுகிறார்.கதவை மூட சென்ற சில்வெஸ்டர், வழுக்கி கீழே விழுந்தாலும் கால்களால் கதவை உதைத்து கொள்ளையனுடன் போராடுகிறார்.

உள்ளே சென்ற பெண் எச்சரிக்கை ஒலியை எழுப்ப, கடை முழுவதும் புகை சூழ தொடங்கியது. இதை கண்டு பயந்த கொள்ளையன் திரும்பி வந்த வழி தப்பி ஓடுகிறான்.

தைரியமாக கொள்ளையனுடன் போராடி வெறும் கையுடன் விரட்டியடித்த கடை உரிமையாளர் பில் சில்வெஸ்டருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.