பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்!!

பிரபல நகைச்சுவை நடிகர் அஷ்ரப் ரயி மாரடைப்பால் தனது 65வது வயதில் காலமானார்.

பாகிஸ்தானை சேர்ந்த அஷ்ரப் இந்திய பஞ்சாபி மொழி திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் தான் பிறந்த நாட்டிலும் திரைப்படங்கள், நாடகங்களில் அஷ்ரப் நடித்துள்ளார்.

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட அஷ்ரப் திரையில் பேசும் வசனங்கள் ரசிகர்களை அதிகளவில் தங்கள் கவலையை மறந்து சிரிக்க வைத்தது.

புகழின் உச்சியில் இருந்த அஷ்ரப் கடைசி காலத்தில் பல நடிகர்களை போலவே நிதி நெருக்கடியால் கஷ்டப்பட்டார்.

சில காலமாகவே நீரிழிவு நோய் மற்றும் வேறு சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அஷ்ரபின் உடல் நிலை நேற்று முன் தினம் இரவு மோசமானது.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.

அஷ்ரபின் மரணத்துக்கு ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.