பேஷன் என்ற பெயரில் மீண்டும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கு மாறிய ஓவியா……

நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் களவாணி. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும் அதற்கு அடுத்து அவர் நடித்து வந்த சில படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் நடிகை ஓவியா சினிமா வாய்ப்பு ஏதுமின்றி இருந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்த அவருக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற வாய்ப்பு கிடைத்தது.அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஆரவ் ஓவியா ஜோடி வெளியில் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்தனர்.

இதன் மூலம் இவ்வாறு பல பஞ்சாயத்துக்களுக்கு பின்னர் பேசப்படும் நடிகையாக ஓவியா மாறினார்.இருப்பினும் அதிகமான படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் 90 எமேல் என்ற திரைப்படத்திலும் களவாணி படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்திருந்தார்.இந்தநிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின்னர் டாம்பாய் லுக்கில் சுற்றிவந்தார்.தற்போது மீண்டும் தனது முடியை வித்தியாசமாக கட் செய்துள்ளார்.பேஷன் என்ற பெயரில் இப்படி ஒரு வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.