ஓடும் பேருந்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்!!

லண்டனில் கடந்த 30 ஆம் திகதி ஓரினச் சேர்க்கையாளர்களான இரண்டு இளம்பெண்கள் பேருந்தில் பயணம் செய்திருக்கின்றனர்.

அப்போது, குறித்த பேருந்தில் பயணம் செய்த மூன்று சிறுவர்கள் இளம்பெண்களைப் பார்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதை அறிந்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரையும் முத்தமிட்டு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

தாங்கள் பார்க்க விரும்புவதாகவும், முத்தமிட்டுக்கொள்ளாவிட்டால் அடிப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.

இருப்பினும், அந்த இரு பெண்களும் முத்தமிட்டு கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் மூவரும் இளம்பெண்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதில் அவர்கள் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் உடமைகளையும் ஒரு சிறுவன் திருடி இருக்கின்றார். இந்நிலையில் இது குறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது.

இதில் அந்த சிறுவர்களின் மீதான குற்றம் உறுதியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சமூக சேவை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.