நடிகர் தனுஷ் நடித்து வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின், இதன்பின் விசில் படத்தில் நடித்த ஷெரின் அந்த படம் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று குடுத்தது.
பின் நீண்ட காலமாக சினிமா பக்கமே தலையை காட்டாமல் இருந்த ஷெரின். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதுமட்டுமல்லாது குறித்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார் நடிகை ஷெரின்.
இந்நிலையில் படவாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைப்பது போல் தெரியவில்லை. எனவே தனது ரசிகர்கள் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.
தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.