சினிமாவுக்காக முழுமையாக அர்ப்பணித்து பல்வேறு விஷயங்களை படத்திற்காக செய்து வருபவர் நடிகர் விக்ரம். உடல் எடை கூடுவது என்றால் சரி குறைத்து எலும்பும் தோலுமாக ஆகுவது என்றாலும் சரி அவர் அனைத்தையும் செய்து நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் விக்ரமையே ஆச்சர்யபடுத்திய பிரபலம் என்றால் அது கிரிக்கெட் வீரர் தோணி தான். சில வருடங்களுக்கு முன்பு தோணி பற்றி விக்ரம் பேசிய சில விடீயோக்கள் தற்போது இணையத்தில் சுற்றிவருகின்றன.
தோணி 15 வருடங்கள் கடந்ததை கொண்டாடும் விதமாக #DHONIsmCelebrationBegins என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதற்காகத்தான் விக்ரம் பேசிய பழைய விடீயோக்களையும் தற்போது மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
எனக்கு தலைவன் தோனி தான் ??#DHONIsmCelebrationBegins pic.twitter.com/UXNQpAwqeE
— சசி விக்ரம் ツ (@chiyaangod) December 20, 2019