நடிகை தீபிகா படுகோனுக்கு வழங்கப்படும் சர்வதேச விருது.!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச கிறிஸ்டல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள்  அனைத்தும் அங்கம் வகித்து வரும் ஜெனிவா உலக பொருளாதார நிறுவனம் என்ற தன்னார்வ அமைப்பு,  வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டேவோஸில் நடக்கும் விழாவில் இந்த விருதை தீபிகா படுகோனுக்கு வழங்க உள்ளது.

டேவோஸில் நடக்கும் இந்த விழாவில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்களும், சர்வதேச அரசியல் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.  இந்த விருது கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா, நாட்டில் 30 கோடிக்கும் அதிகமானோர் மனநல பாதிப்பால் அவதிப்படுவதாகவும், உலக அளவில் உருவாகும் பல்வேறு நோய்ச்சுமைகளுக்கு மனநல பாதிப்பு முக்கிய காரணமாக இருப்பதாக கூறி உள்ளார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் போன்ற கதாபாத்திரங்களை ஏற்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது.