2020இல் புதிய கலண்டரை எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

ஒருவழியாக 2019 முடிந்து 2020 தொடங்கப்போகிறது. புதுவருட காலண்டர் வாங்குவது மிகவும் எளிதானது ஆனால் அதற்கும், வாஸ்துவிற்கும் உள்ள தொடர்பு மிக நீண்டது.

பழைய காலண்டரை ஒருபோதும் உங்கள் வீட்டிற்குள் வைத்திருக்கக்கூடாது. இது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். மேலும் புது காலண்டரை தவறான இடத்தில் மாட்டுவதும் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, எந்தவொரு பொருளையும் தெற்கு திசையில் தொங்கவிடக்கூடாது. நேரத்தைக் குறிக்கும் கடிகாரம், நாட்களைக் காட்டும் நாட்காட்டி என அனைத்தையும் ஒருபோதும் தெற்கு திசையில் தொங்கவிடக் கூடாது.

இதற்கு மாற்றாக வடக்கு திசையில் காலண்டரை வைக்கலாம். கிழக்கு, மேற்கு என அனைத்து திசையும் நேர்மறை ஆற்றலை குறிப்பதாகும்.

நீங்கள் படங்களுடன் இருக்கும் காலண்டரை பயன்படுத்த விரும்பினால் அதில் நிர்வாணம், வன்முறை, வேதனைப்படும் மிருகங்கள் போன்றவற்றின் படம் இருக்கக்கூடாது. இந்த படங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்புகின்றன மற்றும் சிறு குழந்தைகளின் மனதில் மோசமான தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த புத்தாண்டில் உங்கள் வீட்டை மாற்றியமைக்க நினைத்தால் அதனை சரியாக செய்யுங்கள்.
இதேவேளை, அழுக்கு கண்ணாடிகள் இருள் மற்றும் மனச்சோர்வை அழைக்கின்றன.

எனவே உங்கள் கண்ணாடியை ஈரமான துணியால் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். தூங்கும்போது உங்கள் கண்ணாடியை மூடிவைப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் இது உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழைவதைத் தடுக்கும்.