அஜித்தின் 60வது படத்திற்கு யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை!

அஜித் இந்த வருடம் மட்டுமே இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டார். அடுத்து தன்னுடைய 60வது படத்திற்கும் தயாராகி வருகிறார்.

இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதால் உடலை பிட்டாக வைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது இன்றிலிருந்து படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

படப்பிடிப்பு தகவல் வந்தாலும் இன்னும் இதில் நாயகி யார் என்று இதுவரை வெளியாகவில்லை. இந்த நேரத்தில் தான் படத்தில் நடிகை யாமி கௌதம் நாயகியாக கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

நயன்தாரா, பாலிவுட் நடிகைகள் ஆலியா அல்லது பரீணிதி என்று கூறப்பட்டு வந்த நிலையில் யாமி கௌதம் பெயர் அடிபட்டிருப்பது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்க்காத ஒன்றாக உள்ளது.