ஜில் ஜில் புகைப்படம்.. சிலிர்த்துப்போன ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் காற்றின் மொழி திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை லட்சுமி மஞ்சு. இவர் கடந்த ஐந்து வருடங்களில் தனது தோற்றத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை சமீபத்தில் புகைப்படங்களாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகிறது. நடிகை லட்சுமி மஞ்சு சாந்தமாமா காதலு., காற்றின் மொழி., ராம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் திரையுலகை போன்று தெலுங்கிலும் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் தனது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.


இப்போது எந்த விதமான படமும் இல்லாத நிலையில்., சமூக ஊடகங்களில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் லட்சுமி தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை முறையை ரசிகர்களிடம் தெரிவிப்பார்.

இதன் மூலமாக ரசிகர்களை தக்கவைத்து மகிழ்ச்சி உள்ளாகியிருக்கிறார். தற்போது கடந்த ஐந்து வருடங்களில் அவரது உருவ மாற்றம் குறித்த புகைப்பட பதிவை பதிவு செய்து ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.