தாம்பத்தியம் மேற்கொண்டால் ஏற்படும் நன்மைகள் என்ன?..!!

தாம்பத்தியம் என்பது தம்பதிக்கிடையே ஏற்படும் அழகான மற்றும் இயற்கையான விஷயமாகும். தம்பதிகள் தங்களின் சந்ததியை பெருக்கும் நோக்கத்தோடு மட்டுமல்லாது., இல்லற வாழ்க்கையின் முதற்படியை தாம்பத்தியத்தில் ஏற்படுத்துகின்றனர்.

இந்த தாம்பத்தியத்தின் மூலமாக தம்பதிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதனை பல நிறுவனங்கள் தம்பதிகளுக்கு இடையே தாம்பத்தியத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டும் வருகிறது.

தம்பதிகள் தினமும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் சளித்தொல்லை நீங்குகிறது. முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது., தாம்பத்தியத்தின் போது வெளியாகும் ஆக்சிடோசின் என்கிற ஹார்மோன் காரணமாக மூளைக்கு ஓய்வை அளிக்கிறது.

இதனால் நமது அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தம் போன்ற பிரச்சனை குறைகிறது. மேலும்., நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தல்., நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பு போன்ற நன்மை கிடைக்கிறது.

இதனைப்போன்று பெண்கள் தாம்பத்தியத்தில் தினமும் ஈடுபடுவதால் டெஸ்டிரோஜன் அதிகளவு சுரந்து., ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் இருந்து தடுக்கப்படுகிறது. பெண்ணின் இடுப்பு தசைக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. கீழ்முதுகு பிரச்சனையை சரி செய்கிறது.