அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்… மொத்த வீரர்கள் எவ்வளவு? வெளிநாடுகளிலிருந்து எத்தனை பேர்?

இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எத்தனை வீரர்கள் பங்கேற்கினறனர், எந்தெந்த நாடுகளில் இருந்து வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதற்கான ஐபிஎல் ஏலம் வரும் 19-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

பொதுவாக ஐபிஎல் பெங்களூருவில் நடைபெறும், சமீபத்தில் பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி பதவியெற்றுள்ள நிலையில், ஏலம் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் வரும் 19-ஆம் திகதி நடைபெறுகிறது

ஐபிஎல் 2020-க்காக ஒவ்வொரு அணிக்கும் 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏலத்தில் மீதமுள்ள தொகையுடன் கூடுதலாக 3 கோடி ரூபாய் ஒவ்வொரு அணி உரிமையாளரின் இருப்பில் இருக்கும்.

டெல்லி அணியிடம் அதிகபட்சமாக, .8.2 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது. அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.15 கோடி ரூபாய் வைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 6.05 கோடி ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் அணி 3.55 கோடி ரூபாயும் கையிருப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம்3.2 கோடி ரூபாய் உள்ளது. பெங்களூரு அணியிடம் 1.80 கோடி ரூபாய், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம்5.30 கோடி கைவசம் உள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் ஏலம்தான் ஏற்கெனவே இருக்கும் வீரர்களுக்கான கடைசி ஏலம். 2021 மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலத்தில் வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்த முறை ஏலத்துக்கு மொத்தம் 971 கிரிக்கெட் வீரர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளார்கள். இதில் 713 இந்திய வீரர்கள், வெளிநாடுகளில் இருந்து 258 வீரர்களும் தங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் (19 வீரர்கள்), அவுஸ்திரேலியா (55வீரர்கள்), வங்கதேசம் (6 வீரர்கள்), இங்கிலாந்து (22 வீரர்கள்),நெதர்லாந்து (1 வீரர்), நியூஸிலாந்து (24 வீரர்கள்), தென் ஆப்பிரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39 வீரர்கள்), அமெரிக்கா (1 வீரர்), மேற்கிந்திய தீவு (34வீரர்கள்), ஜிம்பாப்வே (3 வீரர்கள்) உள்ளனர்.