சினிமாவில் நடிக்கவே தடை? நடிகருக்கு வந்த சிக்கல்.! காரணம் இதுதான்..!!

சமீப காலமாக கேரள சினிமாவில் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் அண்மைக்காலமாக நடந்து வரும் பிரச்சனை என்றால் அது ஷேன் நிகம் தான்.

ஷேன் நிகம் கும்பளாங்கி நைட்ஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமானார். வெயில் என்கிற மலையாள படத்திலும் இவர் கமிட் ஆகியுள்ளார்.

இதெற்கிடையே, வெயில் படத்திற்காக முடி வளர்க்க சொல்ல, ஆனால் இவரோ முடியை வெட்டிவிட்டார், அது மட்டுமில்லாமல் சம்பளம் 30 லட்ச ரூபாய் சம்பளத்தை பேச, படத்தில் நடிக்க ஆரம்பித்த பின்பு 40 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும், அப்போது தான் நான் படத்தில் நடிப்பேன் என ஷேன் கூறியதாக படத்தின் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்து படத்தில் நடிக்கிறேன் என ஷேன் சொல்லி, சில தினங்களில் மீண்டும் தனது முடியை வெட்டியுள்ளார்.

இதையடுத்து இந்த இது பெரிய பிரச்சனையாக வெடித்தது, அவர் கேரள சினிமாவில் நடிப்பதற்கே தடை என்ற நிலையில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.