வாயைமூடி இருக்காமல் வம்முக்கு இழுத்த பிரபல நடிகை.. மொபைல் நம்பர் கேட்டு மிரட்டும் ரசிகர்கள்..

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை காஜலுக்கு அசிஷ்டண்ட்டாக வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரைசா. அந்த படத்தின் படபிடிப்பு முடிந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா பல பிரச்சனைகளை சந்தித்து இறுதி வாரம் வரையில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைவரின் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்வதை போன்று ரைசாவிற்கும் படவாய்ப்புகள் குவிந்தனர். தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரைசா சமுகவலைத்தளத்தில் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டார் ரசிகர்களிடம்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையில் இருந்த வண்ணம் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதில் Call me on my landline என்ற பதிவினை பதிவிட்டு இருந்தார்.

இதை கண்ட ரசிகர்கள் உங்கள் நம்பர் கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். இதை வைத்து ரசிகர்கள் இப்புகைப்படத்தினை ட்ரெண்ட் செய்தும் வருகிறார்கள்.