நடிகர் அஜித்தை அரசியலில் இழுக்கிறதா தமிழகம்?

நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம், வந்தால் முன்னோடியாக இருப்பார் என்ற அமைச்சரின் பேட்டி தற்போது தமிழக அரசியல் புது சிக்கல் தலைதூக்கியுள்ளது.

பல வருடங்களாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று தமிழகத்தில் கூறப்பட்டுவந்தது. தொடர்ந்து தற்போது அரசியல் பயணம் துவங்க நடிகர் ரஜினிகாந்த் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் சிலர் பயப்பட துவங்கிவிட்டனரோ என்ற கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசனின் 60ஆண்டு திரைப்பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவேன் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். அன்றும் அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடந்துள்ளது, நாளையும் அதிசயம் நடக்கும், என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதன்பின் பேசிய நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியலில் ரஜினி மற்றும் கமல் இணைந்து பயணித்தால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும், அடுத்து இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும் என்றும் பேசினார்.

இதை சுற்றி சில நாட்களாக தமிழக அரசியல் சுழற்கிறது. அதாவது, அதிமுக அதிகாரபூர்வ நாளேட்டில், நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டது.

அதன்பின் பேசிய அமைச்சர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம், அரசியலுக்கு வந்தால் அவர் முன்னோடியாக இருப்பார் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் அஜித் கண்ணியமானவர் என்றும் அவர், தொழில்பக்தி மிக்கவர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் நடிகர்களை சுற்றியே அரசியல் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித் குறித்து அரசியல் தலைவர்கள் பல கருத்துகள் முன் வைத்தாலும், நடிகர் அஜித் தரப்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.