கைதி இதுநாள் வரை தமிழகத்தின் மொத்த வசூல்..!!

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தரமான படங்களுக்கு வரவேற்பு கொடுப்பார்கள். அந்த வகையில் பிகில் என்ற பிரமாண்ட படத்துடன் போட்டிக்கு இறங்கியது கைதி.

இப்படம் தமிழகம் முழுவதும் தற்போது வரை ரூ 53 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இப்படம் முதலில் தமிழகத்தில் 300 திரையரங்கு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், படத்தின் வரவேற்பு கண்டு பலரும் காட்சிகளையும், திரையரங்குகளையும் அதிகரித்தனர், இவ்வளவு குறைவான திரையரங்கில் ரிலிஸாகி ரூ 53 கோடி வரை வசூல் செய்தது பெரிய விஷயம் தான்.