தமிழ் சினிமாவில் 80களில் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சங்கள் என்ற படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் நவயுகம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். நடிகையாக பல விருதுகளை பெற்று புகழ் பெற்றவர் மீனா.
அதன்பின் 1980 முதல் 2003 வரை ஹீரோயினாக வளம் வந்தார். வயதாக அவரது மார்க்கெட் குறைந்ததால் சிறப்பு கதாபத்திரத்திலும், சிறுசிறு கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். தமிழ் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தார். அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு வந்தார்.
தான் குழந்தை நட்சத்திரமாக எப்படி சினிமாத்துறையில் நுழைந்தாரோ அதுபோலவே அவரது மகள் நைனிகா வித்யாசாகர் விஜய் படமான தெறி படத்தில் அறிமுகப்படுத்தினார். தற்போது தொலைக்காட்சியை விட்டுவிட்டு இணையதள வெப்சீரிஸில் நடித்து வருகிறார். மீனா நடித்து வெளியாக இருக்கும் கரோலின் காமாக்ஷி என்ற படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்த டிரைலர் வீடியோ படுமோசமான வசனங்களும், ஆபாச காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. சாதரணமாக திரைப்படங்களுக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் கொடுப்பது வழக்கம். ஆனால் வெப்சீரிஸிற்கு சென்சார் இல்லாததால் படுமோசமாக காட்சிகள் இட ம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் அமைந்திருக்கும் வெப்சீரிஸில் மீனா எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.