நீண்ட நாட்களுக்கு பின்பு தர்ஷனுடன் ஷெரின்…

பிக்பாஸ் பிரபலங்களில் தர்ஷன் ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்டவர் தான். பிக்பாஸ் டைட்டிலை தர்ஷன் தான் கண்டிப்பாக வெல்வார் என்ற ரசிகர்களின் எண்ணம் தவிடுபொடியானதால் கண்ணீர் கூட சிந்தினார்கள்.

தர்ஷன், ஷெரின் இடையே பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் ஏற்பட்டவாறு இருந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய பின்பு தர்ஷனுடனான பேச்சு வார்த்தையினை நிறுத்தினார் ஷெரின்.

அதன் பின்பு சனம் சனம் ஷெட்டியும், தர்ஷனும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே… சமீபத்தில் இருவரது காதலுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டும் வந்தது. ஆனால் நேற்றைய தினத்தில் சனம் ஷெட்டி தர்ஷனுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியது.

இந்நிலையில் தர்ஷன் ஷெரினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அதவானித்த ரசிகர்கள் நண்பர்கள் காதலர்களாக மாறலாம்… வாழ்த்துக்கள் என்று கூறி வருகின்றனர்.