7 வயது சிறுவனை கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்.! விசாரணையில் பேரதிர்ச்சி..!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் உள்ள மியோபேட் பகுதியில் வசித்து வருபவரின் பெயர் ராஜு. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., இவரது மகனின் பெயர் அர்ஜுன் (வயது 7).

சிறுவன் அர்ஜுன் நேற்று மாலை நேரத்தில் வீட்டிற்கு முன்னதாக விளையாடிக்கொண்டு இருந்த நிலையில்., திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து சிறுவனை அக்கம்பக்கத்து வீடு மற்றும் உறவினர்களின் இல்லம்., அவரது நண்பர்களின் இல்லம் என அனைத்து இடங்களிலும் பெற்றோர் தேடியுள்ளனர்.

அர்ஜுனை காணாது பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைக்கவே., அர்ஜுனின் தந்தைக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபரொருவர் ” அர்ஜுனை நான் கடத்தி வைத்துள்ளேன்., எனக்கு ரூ.3 இலட்சம் பணம் கொடுத்தால் தான் அர்ஜுனை உயிரோடு பார்க்க முடியும்., இல்லையேல் கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து பதறிப்போன அர்ஜுனின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து., மர்ம நபரின் அழைப்பிற்க்காக காத்திருந்துள்ளனர். காவல் துறையினரின் திட்டப்படி அதிக நேரம் பேச்சு கொடுக்க ராஜுவிடம் முன்னதாகவே அறிவுரை கூறியுள்ளனர்.

காவல் துறையினரின் அறிவுரைப்படி சுமார் அரைமணிநேரம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த நிலையில்., அலைபேசியின் தற்போதைய இருப்பிடத்தை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். மேலும்., அரைமணிநேர பேச்சு வார்த்தையில் ரூ.2 இலட்சத்தை ரொக்கமாகவும்., ரூ.1 இலட்சத்தை செக்காகவும் கேட்டுள்ளான்.

இதற்கு பதிலளித்த ராஜு ” ஏ.டி.எம் இயனத்திரத்தில் ரூ.3 இலட்சம் பணம் எடுக்க இயலவில்லை என்பதால்., இன்னும் ஒரே மணிநேரத்தில் பணத்துடன் தாங்கள் கூறிய இடத்திற்க்கு வந்துவிடுகிறேன் என்றும்., தனது மகனை தயவு செய்து ஒன்றும் செய்துவிடாதீர்கள்” என்றும் காவல்துறையினர் அறிவுரைக்கேற்ப பேசியுள்ளார்.

இதனையடுத்து பணத்துடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினருடன் விரைந்த நிலையில்., அர்ஜுனை கடத்தியது 14 வயதுடைய மாணவன் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சிறுவனை கைது செய்து அர்ஜுனை மீட்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.