எனக்கு படிக்கவே பிடிக்கல… பேராசிரியர் செய்த செயலால் விபரீத முடிவெடுத்த மாணவி..!

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி கல்லூரியில் கேரள மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், திருச்சி கல்லூரியில் மாணவி ஒருவர் பேராசியரின் தொந்தரவு தாங்க முடியாமல் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெனிஃபர் திருச்சி பாரதிதாசன் பழ்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவர், தனது விடுதி அறையில் ஃபினாயில் குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட ஜெனிஃபர் தோழிகள் உடனடியாக காவலாளி உதவியுடன் ஜெனிஃபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும் சுயநினைவு திரும்பியுள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் தற்கொலை குறித்த காரணத்தை விசாரித்துள்ளனர்.

விசாரானையில் ஜெனிஃபர் கூறியதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர் கூறியதாவது, கல்லூரி பேராசிரியர் தனது செல்போனில் உள்ள ரகசிய போட்டோக்களையும், பதிவுகளையும் திருடியதாகவும், அதை வைத்துக்கொண்டு தன்னை மிரட்டி வந்ததாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நான் வேறு வழி தெரியாமல் கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஜெனிபரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பேராசியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேராசியரின் நடவடிக்கைகளை குறித்து பல மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால், பொலிசார் குறித்த பேராசிரியரை விசாரனை செய்து, அவரது லேப்டாப்பினை சோதித்து பார்த்ததில், ஜெனிபரை போன்று மற்ற மாணவிகளின் செல்போன் ரகசியங்களை தனது லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து, அதன் மூலம் பேராசிரியர்.பாலியல் ரீதியாக மாணவிகளை மிரட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், பொலிசார் தொடர் விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.