இன்றைய ராசிபலன் (12.11.2019)

ஸ்ரீ விகாரி ஆண்டு – ஐப்பசி 26 – செவ்வாய்கிழமை (12.11.2019)
நட்சத்திரம்: பரணி இரவு 10.22 வரை பின்னர் கார்த்திகை
திதி : பௌர்ணமி இரவு 8.13 வரை பின்னர் பிரதமை
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45 / மாலை 4.45 – 5.45

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை)
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, குடும்ப வசதி வாய்ப்புகள் பெருகும். குல தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். மனம் விரும்பிய காரியங்களை செய்ய முடியும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட விவாதங்கள் தீரும். அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

கடக ராசி
கடக ராசி நேயர்களே, உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, குடும்ப பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ளவும். வருங்காலம் குறித்த யோசனை இருக்கும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபம் வந்து நீங்கும். தொழிலில் லாபம் ஏறு முகமாக இருக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை வெற்றி அடையும். பண விவகாரத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, குடும்ப பெருமை உயரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, திட்டமிட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில்அந்தஸ்து உயரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். நினைத்த வேகத்தில் வேலைகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.