நடிகர் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய பையனா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். வின் டிவி என்னும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பென்ச் என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சந்தானம். அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்துவந்தார்.

அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் சந்தானம். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடித்துள்ளார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்து காட்டினார்.  பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் காலடி வைத்தார்.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் காதல் அழிவதில்லை. இப்படத்தில் கல்லூரி மாணவராக சிம்பு நடித்திருப்பார். அதில் அவரது நண்பர்களில் ஒருவராக சந்தானம் அறிமுகமானார்.

சந்தானம் தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்துவருகிறார். சந்தானத்திற்கு நிபுன் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் அண்மையில் சந்தானம் தனது மகனை நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது