ருசியான ராகி நூடுல்ஸ் !! செய்வது எப்படி.?!

வாரம் ஒருமுறை ராகியை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய ராகியை பலவாறு சமைத்து சாப்பிடலாம். இப்போது இந்த ருசியான ராகி நூடுல்ஸ் எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

ராகி நூடுல்ஸ் – 2 கப்
பெரிய வெங்காயம் – 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
குடை மிளகாய் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
முட்டைக்கோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
நெய் – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தௌpத்து பிசறி ஆவியில் வேக வைத்து எடுத்து, பிறகு உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், குடை மிளகாய், முட்டைக்கோஸ், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயத்தாள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு வேகவைத்து எடுத்த ராகி நூடுல்ஸையும் அதோடு சேர்த்து கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ராகி நூடுல்ஸ் தயார்!!!