பொடுகை முற்றிலும் ஒழிக்க எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்தலாம்..!!!

பொடுகுகள் இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படும். அதனால் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணைச் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். இயற்கை முறையில் பொடுகை ஒழிக்க எலுமிச்சை பழம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

எலுமிச்சை துண்டை, உப்பில் தொட்டு சிறிது நேரம் முகத்தில் தேய்த்து, பின் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் போய்விடும்.

முழங்கால் மற்றும் முழங்கையின் கருமையை போக்க, எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், முழங்கால் மற்றும் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் லேசாக மறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சையில் சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி அதிகம் உள்ளது. எனவே எலுமிச்சையை தேனுடன் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும்.

தலைக்கு செயற்கை கண்டிஷனர்களைப் பயன்படுத்தாமல், எலுமிச்சையின் சாற்றை தலைக்கு ஊற்றி அலசி, பின் குளிர்ந்த நீரில் மீண்டும் அலசினால், கூந்தல் நன்கு மென்மையாக இருக்கும்.

எலுமிச்சைக்கு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றும் சக்தி உள்ளது. எலுமிச்சை எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் சிறந்தது. எனவே எலுமிச்சை துண்டுகளை முகத்தில் சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும்.