ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைத்து வைப்பதற்கான உண்மையான காரணம் என்ன??

உணர்ச்சிகள் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானதுதான். ஆனால் அதனை வெளிப்படுத்தும் விதம் பெரும்பாலும் வித்தியாசமானதாக இருக்கும். பெரும்பாலும் பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனடியாக வெளிப்படுத்திவிடுவார்கள், ஆனால் ஆண்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இதனை அவர்கள் சிறுவயதிலிருந்தே வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் ஏன் தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்கள்? எந்தவொரு உறவாக இருந்தாலும் ஆண்கள் தங்கள் உணர்வுகளை ஒருபோதும் உடனடியாக வெளிப்படுத்தமாட்டார்கள். பெரும்பாலான ஆண்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நெருக்கமான உறவைப் பேண முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொள்வதற்கான உளவியல் காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காரணம் 1
ஆண்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை. காதலிப்பது என்பது ஆண்களுக்கு மிகவும் சிக்கலான ஒரு உணர்வாகும். நாம் எதையாவது புரிந்து கொள்ளாதபோது அந்த விஷயத்திலிருந்து நம் உணர்வுகளை மறைக்கும் எண்ணம் இயல்பாகவே ஆண்களுக்கு வரும். எனவே தான் என்ன உணர்கிறோம் என்பதை உணர முடியாத போது ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இந்த சமயத்தில் பெண்கள் ஆண்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாமல் போவதால் ஆண்களை விட்டு பிரிந்து செல்கின்றனர்.

காரணம் 2
ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கண்டு பயப்படுவதுதான் அவர்கள் உணர்வுகளை மறைப்பதற்கான மற்றொரு காரணமாகும். ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை புரிந்து கொண்டாலும் அதனை வெளிப்படுத்த அவர்களை பயப்படுகிறார்கள். உங்கள் உடலும் மனமும் காதலிக்கத் தொடங்கும் போதும், நீங்கள் ஒருவரிடம் உணர்வுகளை வளர்க்கத் தொடங்கும் போதும், அதில் எதையும் நீங்கள் பாதிக்க முடியாது. எவ்வளவு தைரியமான ஆணாக இருந்தாலும் தனக்குப் பிடித்த பெண்ணிடம் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்போது பயப்படுத்தான் செய்வார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

காரணம் 3
ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளுடன் தொடர்புகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள் என்பதே உண்மை. ஆண்களை விட பெண்களே காதலில் வெறித்தனமாக இருப்பார்கள். பெண்கள் தான் என்ன நினைக்கிறோம் என்றோ அல்லது அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்றோ விரைவில் முடிவெடுத்து விடுவார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு இருப்பதில்லை. பெண்கள் தான் காதலில் இருக்கிறோம் என்று 100 சதவீதம் உணர்ந்து இருக்கும்போது ஆண்கள் 50 சதவீதம் மட்டுமே உணர்ந்திருப்பார்கள்.

காரணம் 4
ஆண்கள் தங்கள் சக்தியையும், அதிகாரத்தையும் இழக்க விரும்பாமல் இருப்பதே ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் ஆகும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தன்னை பலவீனமானவர்களாகக் காட்டும் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். தாங்கள் விரும்புபவர்கள் முன் தன்னை பலவீனமானவர்களாக காட்டிக்கொள்வதை யாரும் விரும்பமாட்டார்கள். எப்பொழுது அந்த பெண் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும் தன்னுடைய தோற்றம் மாறாது என்று நம்புகிறார்களோ அதன்பிறகு அந்த பெண்ணிடம் மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள்.

காரணம் 5
மற்றவர்களை கிண்டல் செய்யும் போது அதை பார்த்து மகிழும் நாம் நமக்கு அந்த சூழல் வரும் என்று நினைக்கும் போது பயப்படத்தானே செய்வோம். உறவுகளின் ஆரம்ப நிலையில் ஆண்கள் மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள். பெண்களைப் போலவே ஆண்களும் மனதில் பட்டதை கூறுவார்கள். ஆனால் அவர்கள் மீது காதல் வளரும்போது தங்கள் உணர்வுகளை மறைக்கத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்கு தெரிந்தால் தங்களை கிண்டல் செய்வார்களோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்கும்.

காரணம் 6
ஆண்கள் தங்களின் உணர்ச்சிகள் தங்களுக்கு எதிராக பயன்படுத்தபடலாம் என்று அஞ்சுகிறார்கள். தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியவுடன் அனைத்தும் மாறிவிடும் என்று அனைத்து ஆண்களும் நன்கு அறிவார்கள். தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டால் தங்கள் மீது அந்த பெண்ணுக்கு அதிகாரம் அதிகரிக்கும், அதனால் தங்கள் உணர்வுகளை அவர்கள் தங்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று அவர்கள் பயப்படுவார்கள். இதனாலேயே பல ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மறைத்து வைக்கின்றனர்.