இன்றைய ராசிபலன் (09.11.2019)

விகாரி ஆண்டு – ஐப்பசி 23 – சனிக்கிழமை (09.11.2019)
நட்சத்திரம் : உத்திரட்டாதி மாலை 4.32 வரை பின்னர் ரேவதி
திதி : துவாதசி பகல் 3.40 வரை பின்னர் திரயோதசி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45

சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். இக்கட்டான நேரத்தில் மற்றவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். ஆன்மீக ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே, சமூக அந்தஸ்த்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். புதிய முயற்சியில் இருந்த தடை விலகும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். மனக்குறைகள் நீங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

கடக ராசி
கடக ராசி அன்பர்களே, வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவர்.

சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவர். இழுபறியில் இருந்த சொத்து பிரச்சனை முடிக்கு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களே, வருங்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். நண்பர்களிடம் மனம் திறந்து பேசவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களே, திருமண முயற்சிகள் பலிதமாகும். வேண்டியவர்களுக்காக அடுத்தவரின் உதவியை நாட வேண்டிவரும். திடீர் மருத்துவச் செலவு ஏற்படும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களே, சொந்த பந்தங்கள் கேட்ட உதவியை செய்து தர முடியும். வாகன பராமரிப்பு கூடும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் அநாவசியச் செலவுகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறப்பு வகையில் வீண் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் மனநிறைவு கிடைக்கும்.

மகர ராசி
மகர ராசி அன்பர்களே, கடினாமான காரியங்களும் எளிதாக செய்ய முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர்.

கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களே, உங்கள் கனவு நிறைவேறும் நாள். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசுவர். முக்கிய காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி
மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். டென்ஷன், கோபத்தை குறைத்துக்கொள்ளவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.