உடனே கொழுப்பை குறைச்சே ஆகணுமா ஆப்பிளை இந்த முறையில சாப்பிடுங்க!

காலை உணவு என்பது எல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட உணவு நமது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் பார்க்கும் போது ஆள்பிள் சிறந்த காலை உணவு. அது மட்டும் அல்ல, பெரும்பாலானவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால், ஆப்பிள்களால் உடல் எடை அதிகரிப்பைக் குறைக்கக் கூட முடியும்.

நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஆப்பிள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு சிறந்த பழமாகும்.

ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில் 4 கிராம் ஃபைபர் உள்ளது. இது பெண்களுக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட ஃபைபர் உட்கொள்ளலில் 16 சதவீதமும் ஆண்களுக்கு 11 சதவீதமும் ஆகும்.

ஆப்பிளை பழமாக மட்டும் அல்ல இப்படி கூட தயாரித்து சாப்பிடலாம்.

ஆப்பிள் சாலட்

இந்த ரெசிபியில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. ஆப்பிள் சாலட் ஒரு உபயோகத்திற்கு 22 கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளது மற்றும் உடல் எடையை குறைக்க இது மிகச்சரியானது.

தேவையான பொருட்கள்
  • 2 கப் கீரை
  • 1/2 கப் மாதுளை விதைகள்
  • 1 வெட்டப்பட்ட ஆப்பிள்
  • 1/2 கப் சீஸ்
  • 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்,
  • 2 தேக்கரண்டி தேன்
  • 1 சிட்டிகை கருப்பு மிளகு
தயாரிப்பு

அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்க்கவும் . இப்போது ஒரு கரண்டியால் நன்றாக கலந்து அதை உபயோகப்படுத்தலாம். இப்படி சாப்பிட்டால் ஆரோக்கியமாக காலை உணவும் கிடைக்கும். கொழுப்பும் கரையும்.