சுவையான உளுத்தம் பருப்பு பச்சடி..! செய்வது எப்படி.?!

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு – கால் கப்
தயிர் – 1 கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

உளுந்தை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

ஆறியபின் உளுத்தம் பருப்பு பொடி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சுவையான உளுத்தம் பருப்பு பச்சடி தயார்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம் மற்றும் தோசைக்கும் நன்றாக இருக்கும்.