இன்றைய ராசிபலன் (04.11.2019)

ஸ்ரீ விகாரி ஆண்டு – ஐப்பசி 4 – திங்கட்கிழமை (04.11.2019)
நட்சத்திரம் : உத்திராடம் அதிகாலை 4.46 வரை பின்னர் திருவோணம்
திதி : ஸப்தமி காலை 6.31 வரை பின்னர் அஷ்டமி
யோகம் : அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 4.45 – 5.45

திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே, தெய்வ அனுகூலத்தால் நல்ல விஷயங்கள் நடக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய வீட்டை சீரமைக்க வேண்டிருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே, பெற்றோர்கள் நலனில் அக்கறை கொள்ளவும். கடன் பிரச்சனை தலைதூக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.

மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களே, வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தர இயலும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு மாறும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி
கடக ராசி அன்பர்களே, பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். உடன்பிறப்பு வகையில் சில தொந்தரவுகள் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களே, அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். புது நட்பு மலரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சிகையெழுத்திட வேண்டாம். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும்.

துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களே, வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அனாவசிய டென்ஷனை தவிர்க்கவும். உத்யோகத்தில் புகழ் ஓங்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப வளர்ச்சி குறித்த யோசனை அதிகம் இருக்கும். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்ய முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும்.

தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களே, நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மகர ராசி
மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடத்தில் சுமூக உறவு ஏற்படும். எதிரிகள் உங்களிடத்தில் அடிபணிந்து போவர். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். எந்த ஒரு முக்கிய காரியங்களுக்கும் அவசரம் காட்ட வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீன ராசி
மீன ராசி அன்பர்களே, புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். கடந்த சில தினங்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்படும்.