திடீரென நிறம் மாறிய கடல்.!

உலகளவில் சுற்றுலாவுக்கு மிகவும் பெயர் பெற்ற நாடு இங்கிலாந்து தான். அங்கிருக்கும் பல அழகான கடற்கரை நகரங்களில் ஒன்று கார்ன்வால் நகரம். இந்த இடத்தில் இருக்கும் பல கடற்கரை கிராமங்களில் குளிப்பதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கார்ன்வாலைச் சுற்றி இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் கடந்த வாரம் வழக்கம் போல சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் தங்களை ஜெல்லி மீன்கள் கடிப்பதைப் போல உணர்ந்துள்ளனர்.

அப்பொழுது உற்றுப் பார்கையில், நீல நிறக் கடல் ஆரஞ்சு நிறமாக மாறி இருப்பதை கண்டு அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர். பின்னர் ஆரஞ்ச் நீரில் குளித்த மக்கள் தங்களுக்கு ஏதாவது வியாதிகள் வந்திருக்குமோ? என கருதி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

இருப்பினும், இதனால் எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூற நிம்மதி அடைந்தனர். கடலில் உள்ள ஆல்காக்கள் என்னும் கடல் உயிரிகளில் ஒருவகை ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அவை கூட்டாக மேலே வரும் போது கடல் ஆரஞ்சு நிறமாக மாறும். என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் அரசு தரப்பில் இதுகுறித்து இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.