5G தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப்போகும் நோக்கியா..!!

தொலைத்தொடர்பாடல் சாதனங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்துவரும் நோக்கியா நிறுவனம் தற்போது 5G வலையமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கு 350 பொறியியலாளர்களை பணிக்கு அமர்த்தவுள்ளது.

இவர்கள் அனைவரும் பின்லாந்தில் உள்ள நோக்கியா நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது சுவீடன் நாட்டின் Ericsson மற்றும் சீனாவின் Huawei நிறுவனங்கள் 5G தொழில்நுட்பத்தினை அபிவிருத்தி செய்து வருகின்றன.

எனினும் இந்நிறுவனங்களின் 2019 – 2020 ஆண்டிற்கான வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே நோக்கிய நிறுவனம் இந்த அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிறுவனம் 240 பொறியலாளர்களை SoC (System on Chip) எனப்படும் 5G தொழில்நுட்பத்திற்கு தேவையான சிப்களை வடிவமைக்க பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.