முதல் படியிலே சறுக்கி விழுந்த…தனது கிரிக்கெட் வாழ்க்கை கூறும் சச்சின்…!

உலகிலே சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலே சந்தித்த தடைகள் குறித்த ஊக்குவிக்கும் கதை பகிர்ந்துள்ளார்.மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள Late Laxmanrao Dure பள்ளி மாணவர்களுடன் உரையாடும் போது சச்சின் கூறுகையில், நான் மாணவனாக இருந்தபோது, என் மனதில் ஒரே விஷயம் இந்தியாவுக்காக விளையாடுவது என்பது தான். எனது பயணம் 11 வயதில் தொடங்கியது.எனது முதல் தேர்வு சோதனைக்கு நான் சென்றபோது நடந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது, நான் தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடினமாக உழைத்து தனது விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.

அந்த நேரத்தில் நான் ஏமாற்றமடைந்தேன், ஏனென்றால் நான் நன்றாக துடுப்பாடினேன் என்று நினைத்தேன், ஆனால், நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை, நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை.ஆனால் அதற்குப் பிறகு எனது கவனம், அர்ப்பணிப்பு மற்றும் கடினமாக உழைக்கும் திறன் மேலும் அதிகரித்தது. நீங்கள் உங்கள் கனவுகனை அடைய விரும்பினால், அதற்கு குறுக்கு வழி ஒருபோதும் உதவாது என்று கூறினார்.