சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சுரைக்காயை இப்படி சாப்பிடுங்க…!

சுரைக்காயில் 92 சதவீதம் நீர்ச்சத்து மற்றும் 8 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது.அதுமட்டுமின்றி சுரைக்காயில் உள்ள புரோட்டீனான தைரோசின் பாஸ்படேஸ்-1 நொதி, உடலில் சரியான இன்சுலின் அளவைப் பராமரிக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.அந்தவகையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சுரைக்காயை சாப்பிடும் சில வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சுரைக்காயை எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு மாயமாய் குறைவதைக் காணலாம்.

சுரைக்காயை சாப்பிடுவதற்கான மற்றொரு சிறப்பான வழி, தயிருடன் சேர்த்து உண்பது தான். சுரைக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.இரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் சுரைக்காய் ஜூஸைக் குடியுங்கள். அதுவும் காலை உணவின் போது சுரைக்காய் ஜூஸை எடுக்க வேண்டும். இதனால் இரத்த சர்க்கரை அளவு வேகமாக கட்டுப்பாட்டிற்கு வரும்.

சுரைக்காய் உடலில் உள்ள பித்தத்தை நீக்கி, வயிற்றை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு சுரைக்காயை வேக வைத்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் இதர நற்பதமான காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடவும்.சுரைக்காயை பருப்பு வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அதுவும் சுரைக்காய் மற்றும் ஏதேனும் ஒரு பருப்பை குக்கரில் போட்டு, நீர் ஊற்றி விசில் விட்டு இறக்கி, சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். சுரைக்காயை ஒருவர் உட்கொண்டால், அது வயிற்று பிரச்னைகளை நீக்குவதோடு, செரிமான மண்டலத்தை ரிலாக்ஸாக வைக்கும். சுரைக்காயை ஜூஸாக குடிப்பதே சிறந்தது. இதனால் அதில் உள்ள ஒட்டுமொத்த விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.