தெலுங்கில் விஜய்யின் ஆல் டைம் பெஸ்ட் வசூல் பிகில்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த படம். விஜய்க்கு ஏற்கனவே மெர்சல், சர்கார் மூலம் தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவானது.

இதை தொடர்ந்து பிகில் நேற்று தெலுங்கில் மிகப்பிரமாண்டமாக ரிலிஸ் செய்யப்பட்டது, இப்படம் அங்கு டீசண்ட் ஓப்பனிங் பெற்றுள்ளது.

தெலுங்கில் பிகில் சுமார் ரூ 2.5 கோடி வரை முதல் நாள் ஷேர் மட்டுமே செய்துள்ளதாம், இதன் மூலம் எப்படியும் வசூல் ரூ 4 கோடி வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், வரும் நாட்களும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக பிகில் தெலுங்கில் ரூ 20 கோடி வரை வசூல் வரும் என்று தெரிகின்றது.

பிகிலோடு ரிலிஸான கைதி படத்திற்கு தெலுங்கில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.