மன்னார் காணி மோசடி சந்தேகநபரை கைது செய்ய உத்தரவு: சிக்குவாரா ரிசாட்டின் சகோதரர்?

தலைமன்னரில் மோசடியான ஆவணத்தை பயன்படுத்த பெறுமதியான காணியை உரிமைகோரிய நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன நேற்று (24) உத்தரவிட்டுள்ளார்.

24 மில்லியன் ரூபா பெறுமதியான காணியை மோசடியான முறையில் கைப்பற்ற முனைந்ததாக குறிப்பிட்டு, இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரிஃப்கான் பதியுதீன் (அமைச்சர் ரிசாத்தின் சகோதரர்) சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றவியல் புலனாய்வுத் துறையில் (சிஐடி) 2015 ல் தெரிவித்திருந்தது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கை வாபஸ்பெறுமாறு மனுதாரரை ரிஃப்கான் ஆதரவாளர்கள் தனது வாடிக்கையாளரை அச்சுறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை கைது செய்ய தலைமை நீதிபதி சிஐடிக்கு உத்தரவிட்டார்.