நடிகர் சல்மான் கான் ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 10 வருடங்களாக பிக்பாஸ் ஷோவுக்கு அவர் தான் தொகுப்பாளர்.
தற்போது வெளிவந்துள்ள பிக்பாஸ் 13 புதிய டீசரில் சல்மான் கோபத்துடன் கத்திவிட்டு வேறு ஆளை வைத்து ஷோ நடத்திக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு வெளியேறியுள்ளார் என காட்டப்பட்டுள்ளது.
இப்படி அவர் செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பே இப்படி கோபத்தில் சல்மான் பலமுறை சென்றுள்ளார். தற்போது ஷோவின் டிஆர்பி அதள பாதாளத்தில் உள்ள நிலையில் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக சல்மான் இப்படி செய்துள்ளார் எனவும் பலர் விமர்சனம் செய்கின்றனர்.