சிவகார்த்திகேயனின் ஆல் டைம் பெஸ்ட் நம்ம வீட்டு பிள்ளை..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை தமிழகத்தில் மட்டுமே ரூ 60 கோடி வசூலை கடந்து மிகப்பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.

இவை தான் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இது வரை வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்துள்ளது.

மேலும், உலகளவில் இப்படம் ரூ 80 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.