காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்.?!

உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே கிடைக்கின்றன.

அதற்காக கிடைத்ததை எல்லாம் காலை நேரத்தில் வயிற்றுக்குள் போட்டுத் திணிக்கக்கூடாது. கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு காலையில் சாப்பிடுவதால் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அமிலச் சுரப்பை அதிகம் தூண்டும் உணவுகளைக் காலையில் அறவே தவிர்க்க வேண்டும். காலை நேரத்தில், வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய மற்றும் உண்ணக்கூடாத உணவுகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் :

காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். இது வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவுகளில் முட்டை சிறந்தது. இதில் புரதங்களும் வளர்சிதை மாற்றத்தைத் (மெட்டபாலிசம்) தூண்டி, ஆற்றலைத் தரும் இதர ஊட்டச் சத்துக்களும் ஏராளமாக உள்ளன.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அத்துடன், இதயம், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிரம்பிய பழம் தர்பூசணி. இதனைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீரடையும். வளர்சிதை மாற்றமும், நினைவுத்திறனும் மேம்படும்.

காலையில் தேனை சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும், மனநிலை மேம்படும். இதனால் அன்றைய நாளில் ஒரு செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.

மேலும் காலை உணவில் பாதாம், நிலக்கடலை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றில் அமில அளவு சமநிலையாக்கப்படும். செரிமானம் சீராக இருக்கும்.