தேவைப்படும் பொருட்கள் :
பொரி – 3 கப்
தக்காளி – 1
வெங்காயம் – ௧
கேரட் – 1
ஊற வைத்த பட்டாணி – 1/2 கப்
ஓமப் பொடி – 1/2 கப்
புதினா சட்னி – 3 ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் – 3 ஸ்பூன்
சாட் மசாலா – 1 ஸ்பூன்
வேக வைத்த உருளைக் கிழங்கு – 1
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
உப்பு – தே. அளவு
செய்யும் முறை :
பொரியை ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளவும். அதில் வேகவைத்த பச்சை பட்டாணி, வேக வைத்த உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்களி, சீவிய கேரட் அனைத்தையும் சேர்க்கவும்.
பின்னர், எலுமிச்சை சாறு, டொமேட்டோ சாஸ் , புதினா சட்னி, சாட் மசாலா, தேவையான உப்பு, ஓமப் பொடி மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்குக் கலந்து கொள்ளவும். ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.