தமிழ் மக்களினதும், மண்ணினதும் விடுதலைக்காக பல்கலைகழக மாணவர்களையும் உள்ளடக்கிய புதிய கட்டமைப்பு: மாவை

தேர்தலிற்கு பின்னரும் மக்களினதும், மண்ணினதும் விடுதலைக்காக பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பையும் உள்ளிட்ட கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் மாவை சேனாதிராசா.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கப் போகிறது என பலரும் கேட்கிறார்கள். தமிழ் மக்களின் விடுதலை, மண்ணின் விடுதலைக்காக பல விடயங்களை அதிகாரபூர்வமற்ற முறையில் பேசி வருகிறோம். இன்னும் பல கட்சிகளுடன் பேச வேண்டும்.

அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை எமது மக்களிற்கு தெரிவிக்கப் போகிறார்கள் என்பதை- குறிப்பாக இனப்பிரச்சனை தொடர்பாக- மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். நாங்கள் மக்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறோம். யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை உரிய நேரத்தில் தெரிவிப்போம்.

பல்கலைகழக மாணவர்களின் முயற்சிக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம். நாங்கள் அவர்களுடன் உடன்பட்டு, அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு மடிவெடுப்பொம். தேர்தலிற்கு பின்னரும் தமிழர்களின் இன விடுதலைக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க நாம் சேர்ந்து செயற்பட வேண்டுமென்பதை பல்கலைகழக மாணவர்களிற்கு தெரிவித்துள்ளோம் என்றார்.