பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? சிவபுராணம் கூறும் உண்மைகள்!!

ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறந்த நிகழ்வுக்குச் சென்றிருக்கும் போதும் என எல்லாக் காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம். எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் அறிவுறுத்துகிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வி, ஞானம் என திறமை பளிச்சிடும். கலையில் சிறந்துவிளங்குவார்கள். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்கசுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களின் தாலிபாக்கியம் நிலைக்கும். இதனால் கணவருக்கு தொழிலில் மேன்மையும், வெற்றியும் கிடைக்கும். இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும்.

பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.. எல்லா காலத்திலும் எல்லா வயதினரும் எல்லா நேரங்களிலும்
அணிந்து கொண்டிருக்கலாம். இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்.

குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்வோமா என்ன? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து என்று மருத்துவர் சொல்லுவாரா? நோய் உள்ளவனுக்குத்தான் மருந்து தேவை. நோய் இல்லாதவருக்கு மருந்து தேவையில்லை.

அதுபோல வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், சிரமங்களில் தவிப்பவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள், எதற்குத்தான் இப்படியொரு ஜென்மம் எடுத்தோமோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், மனநிலை பாதித்தவர்கள் என அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். அணியவேண்டும். இவர்களுக்காகத்தான் சிவனார் ருத்ராட்சத்தை அருளித்தந்திருக்கிறார்.