உங்கள் வாழ்வில் இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க…!

அனைவருக்குள்ளும் இருக்கும் மென்மையான பக்கத்தை வெளிக்கொண்டு வர காதலால்தான் முடியும். பலருக்கும் அவர்களின் முதல் காதல் சரியாக அமைவதில்லை. முதல் காதல் கசப்பான அனுபவத்தால் அனைவரும் அதற்கு பின் காதலில் விழ தயங்குவது பொதுவானதுதான். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.

முதல் காதல் தந்த அனுபவத்தால் மீண்டும் காதலிக்க அஞ்சும் அனைவரும் புரிந்த கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் அனைவரும் உங்களின் முன்னாள் காதலர்களை போல இருக்க மாட்டார்கள். ஆண்களை பொறுத்தவரை முதல் காதல் தோல்விக்கு பிறகு அனைத்துப் பெண்களையும் சந்தேகக் கண்ணுடனேயே பார்ப்பார்கள். அதனால் அவர்களை உண்மையாக காதலிக்கும் பெண் இருந்தால் கூட அதை அவர்களால் உணர முடியாது. உங்களை உண்மையாக காதலிக்கும் பெண் உங்களுக்காக என்னவெல்லாம் செய்வார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பெண் கிடைத்தால் அவரை ஒருபோதும் மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

சிறிய தகவல்களை கூட நினைவில் வைத்திருத்தல் உங்களை உண்மையாக காதலிக்கும் பெண் நீங்கள் எப்போதோ உங்களைப் பற்றி கூறிய சின்ன சின்ன தகவல்களை கூட நினைவில் வைத்திருப்பார்கள். உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்லும்போது உங்களுக்கு அங்கு நேர்ந்த அனுபவத்தை அவர்கள் நினைவுகூறுவார்கள். உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அவர் தன்னுடைய சிறிய மூளைக்குள் வைத்திருப்பார்கள். உங்களை அனைத்து விதத்திலும் ஆச்சரியப்படுத்த அவர்கள் விரும்புவார்கள்.

ஆலோசனைக் கூறுதல் உங்களுக்கான ஆலோசானைகளை கூற அவர்கள் எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள், அது எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் சரி. உங்களின் நண்பர்கள் எப்பொழுதும் சர்க்கரை தடவிய அறிவுரைகளையே கூறுவார்கள். ஆனால் உங்களை உண்மையாக காதலிக்கும் பெண் நீங்கள் செய்வது தவறென்றால் அதனை உங்கள் முகத்திற்கு நேராக தவறென்று கூறுவார்கள். உங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள அவர்கள் உதவுவார்கள். உங்களைத் தவறான பாதையில் செல்ல அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

சொந்தங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வது உங்கள் வாழ்க்கையுடன் தொடர்புள்ள அனைவரைப் பற்றியும் உண்மையான ஆர்வத்துடன் தெரிந்து கொள்வார்கள். உங்கள் நட்பு வட்டாரத்தில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் தொடர்ந்து அவர்களின் உடல்நலம் பற்றி அக்கறையுடன் கேட்டு தெரிந்து கொள்வார்கள். உங்களின் குடும்பத்தை தங்களின் சொந்த குடும்பமாக உளமார நினைப்பார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக நினைப்பார்கள்.

உறுதுணையாக இருப்பது உங்களின் துன்பமான நேரங்களில் இவர்கள் எப்போதும் உங்களை விட்டு செல்லமாட்டார்கள். நீங்கள் உடைந்து போவதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். உங்களின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் அவர்கள் அறிவார்கள். அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளை இவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் அவர்கள் உங்களை ஒருபோதும் துவண்டு போக அனுமதிக்கமாட்டார்கள். உங்களை நினைத்து நீங்கள் வருத்தப்படும் சூழலில் அவர்கள் உங்களுடனேயே இருப்பார்கள்.

அன்பை காண்பித்தல் உங்களை உண்மையாக விரும்புபவர்கள் உங்களுக்கு அன்பு தேவைப்படும் அனைத்து தருணங்களிலும் அங்கு உங்களுக்காக இருப்பார்கள். உங்களின் மனதை நன்றாக படிக்கச் தெரிந்தவராக அவர்கள் இருப்பார்கள். சிலசமயம் நீங்கள் அவர்களிடம் எதையாவது மறைக்க நினைத்தாலும் அவர்கள் அதனை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். உங்களுக்கு எந்த தருணத்தில் எது தேவை என்பதை நன்கு உணர்ந்தவராக இருப்பார்கள்.

விளையாட மாட்டார்கள் உங்களை விரும்பும் பெண்ணின் அற்புதமான குணங்களில் ஒன்று அவர்களின் விருப்பம் என்ன, அவர்களின் எண்ணங்கள் என்ன என்று ஒருபோதும் உங்களை குழப்பத்தில் தவிக்க விடமாட்டார்கள். நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அதனை வெளிப்படையாக உங்களிடம் கூறிவிடுவார்கள். உங்களுடன் ஒருபோதும் மனரீதியான விளையாட்டில் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். எனவே அவர்களுடன் இருக்கும்போது நீங்கள் ஒருபோதும் உங்களின் நிலை என்ன என்பதில் குழம்ப வேண்டாம்

நீங்கள் இல்லாத போதும் உங்களை பாதுகாப்பார் அவர்கள் உங்களின் மீது வெறித்தனமான அன்பு கொண்டவராக இருப்பார்கள். நீங்கள் இல்லாத போதும் அவர்கள் உங்களின் பெயரை பாதுகாப்பார்கள். உங்களை யாராவது தவறாக பேசினால் அவர்களிடம் நேராக சென்று சண்டை போடுவார்கள். உங்களுடன் பழகுபவர்கள் தவறான எண்ணத்துடன் உங்களுடன் பழகுகிறார்கள் என்று அவர்கள் அறிந்தால் முடிந்தவரை உங்களை பாதுகாக்கவும், அவர்களிடம் இருந்து விலக்கி வைக்கவும் முயலுவார்கள். அவர் உங்களுக்கு தோழியாக மட்டுமில்லாமல் மனைவியாகவும் உங்களை பாதுகாப்பார்கள். இது போன்ற பெண் உங்களுடன் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட பெண்ணுடன் உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது.