‘பிகில்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு திகதி அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு திகதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மிரட்டலான டிரைலர் வரும் 12 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளளார்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பொருட் செலவில் உருவாகி வரும் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.