தீர்ப்பை கேட்டதில் மஹிந்தவின் ரியாக்ஷன்!

கோட்டாபயவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

ராஜபக்ச குடும்பம், பெரமுன கட்சி, முழு இலங்கை என்பதை தாண்டி, இலங்கை தொடர்புடைய சர்வதேச மட்டத்திலும் மிகுந்த பரபரப்புடன் எதிர்ப்பார்க்கப்பட்ட தீர்ப்பு இன்று மாலை 6.07 க்கு வழங்கப்பட்டது.

கோட்டாவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கின் தீர்ப்பிற்காக அனைத்து தரப்பும் ஆவலுடன் காத்திருந்ததை போலவே, மஹிந்த ராஜபக்சவும் பரபரப்புடன் காத்திருந்தார். கோட்டா போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டாலும் என்ற முன்னெச்சரிக்கையுடன்தான், சமல் ராஜபக்ச இன்று மாலை கட்டுப்பணம் செலுத்தினார். வழக்கின் தீர்ப்பு எப்படியும் வரலாம் என்ற நிச்சயமின்மை ராஜபக்ச தரப்பிலும் இருந்தது.

வழக்கின் தீர்ப்பை, சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இருந்தபடியே மஹிந்த ராஜபக்சவிற்கு தொலைபேசி வழியாக தெரிவித்தனர். இதன்போது, மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கையை உயர்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் மஹிந்த.

“அவர் வெற்றி பெறட்டும்“ என்றும் இதன்போது, ஜனாதிபதி தேர்தலிற்கான அட்வான்ஸ் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.