பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்னும் முடிவடைய 4 நாட்களே எஞ்சியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து குதூகலப்படுத்தி வருகின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் காட்டப்படாத காட்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் வெறித்தனமான பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளனர். இதில் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்த வனிதாவையும் சாண்டி, இழுத்து வந்து ஆட்டம் போட வைத்துள்ளார். முகேனும், சாண்டியும் விடாமல் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.







