மீண்டும் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் களமிறங்கிய தர்ஷன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் எப்போதோ முடிந்துவிட்டது.  இன்று 103 ஆம் நாள், வரும் ஞாயிற்றுக்கிழமை தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள்.

வரும் ஞாயிற்றுக்கிழமையார் பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளர் யார் என தெரியவரும். பழைய போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் என வீட்டிற்கு வந்ததால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கிறது.

இன்று காலை வந்துள்ள புதிய புரொமோவில் பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் மற்றும் தர்ஷன் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் உள்ளிருக்கும் மற்ற போட்டியாளர்கள் படு கொண்டாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.