அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் டீசர் இணையத்தில் கசிந்ததா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் பிகில் படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

ஆனால் அதற்குள் பிகில் டீசர் இணையத்தில் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, விஜய் பாடிய வெறித்தனம் பாடலை வெளியிடுவதற்கு முன்பே அந்த பாடல் இணையதளத்தில் பரவி விட்டதாக ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள்.

இதுவும் அதேபோல்தானா? இல்லை, நிஜமாலுமே பிகில் டீசர் இணையத்தில் கசிந்து விட்டதா? என்பது தெரியவில்லை. எப்படியும் இதுகுறித்து ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பில் செய்தி வெளியிட்டு உண்மை நிலவரத்தை சொல்வார்கள்.