விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி..!!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்ததை தொடர்ந்து விஜய் நடிக்கும் 64ஆவது திரைப்படத்தை , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல ஹிந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், விஜயின் அடுத்த திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், அதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.