ரோகித் சர்மா இந்தியாவை ஏமாற்றினாரா??

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் ரோகித்சர்மா பயிற்சி போட்டியில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளதை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் இதனை கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கேஎல்ராகுல் சிறப்பாக விளையாடாததை தொடர்ந்து ரோகித்சர்மாவை ஆரம்பதுடுப்பாட்ட வீரராக பரிசோதனை செய்யவுள்ளதாக இந்திய தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஆரம்பமாகியுள்ள பயிற்சி போட்டியில் ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா ஒரு சில பந்துகளில் ஓட்டங்கள் பெறாத நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.
வேர்னன் பிலான்டரின் பந்து வீச்சிற்கே அவர் ஆட்டமிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் வேலையை உடனடியாக ஆரம்பித்துள்ளனர்.

எங்களது நம்பிக்கைக்குரிய புதிய ஆரம்பதுடுப்பாட்ட வீரர் இரண்டு பந்துகளில் ஆட்டமிழந்தார் என ரசிகர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
ரோகித்தின் தலைசிறந்த துடுப்பாட்டம் 2பந்துகளில் ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழந்தார் என டுவிட்டரில் பதிவு செய்துள்ள மற்றொரு ரசிகர் அவர் 300 ஓட்டங்களால் முச்சதத்தை தவறிவிட்டுள்ளார் சிறப்பாக விளையாடினார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்டமிழப்பு அவரது தன்னம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விசால் தீக்சித் என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரோகித்சர்மாவை டெஸ்ட் போட்டிக்கு தெரிவு செய்யக்கூடாது உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உள்ளன என ஜிதேந்தர் சிங் என்பவர் தெரிவித்துள்ளார்.